Friday 18 September 2015

காணாமல் போனவர்களுக்கு விசேட சான்றிதழ்!!

காணாமல் போன குறித்த ஒரு நபர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட முடியாது. அவ்வாறானவர்களுக்கு "காணாமல் போனவர்கள்" என விசேட சான்றிதழ் ஒன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இயற்கைக்கு மாறான வகையிலான மரணங்களுக்கு உள்ளானவர்களுக்கு இவ்வாறு விசேட சான்றிதழ் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பயங்கரவாத செயற்பாடுகள், இயற்கைக்கு மாறான வகையிலான உயிரிழப்புக்கள், சடலங்களை கண்டு பிடிக்க முடியாத சந்தர்ப்பங்கள் போன்ற நேரங்களில் இந்த விசேட சான்றிதழ் வழங்கப்படாது.

இது குறிப்பாக இராணுவத்தால், மற்றும் இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களுக்கும், சரணடைந்து காணாமல் போனவர்களுக்கும் இது போன்ற விஷேட சான்றிதழை வழங்கப் போகின்றார்கள். இந்த நடைமுறை காரணமாக, இன்னமும் இரகசியமாகத் தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களை கொலை செய்யத் தூண்டுவதாகவும் அமையலாம்.

'கண்டுபிடிக்கப்பட முடியாதவர்கள்', என்று ஒரு சான்றிதழ் வழங்கி, அவர்களுக்குச் சில சலுகைகளையும் நட்ட ஈடுகளையும் வழங்கி அவர்களின் பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம்.

யுத்த காலத்தில் யுத்தப் பிரதேசங்களில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளை அவை எவ்வளவு கசப்பானாலும் நாம் ஏற்றுக் கொண்டே  ஆகவேண்டி இருக்கிறது. அதற்கு வேறு வழி என்ன?

இது குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெறாமல் தப்பிக்கவும் உதவப் போகிறது.

No comments:

Post a Comment